2) ஷாவ்ளின் குங்பூ கதைகள் (மீண்டும் மீண்டும் பயிற்சி செய்) :
ஒரு ஊரில் ஒருவன் குங்பூ கற்றுக்கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தான். அவன் ஷாவ்லின் குங்பூ ஆசரியரிடம் சென்று தானும் குங்பூ பயில வேண்டும் என்று சொன்னான் அதற்கு அவர் முதலில் குங்பூ பள்ளியை சுத்தம் செய்ய சொன்னார். அவன் அவர் கட்டளைக்கு கீழ்படிந்து அந்த வேலையை செய்தான். ஒரு வாரம் சென்றபின் மீண்டும் தனக்கு அக்கலையை பயிற்றுவிக்குமாறு வேண்டினான் அவர் செவி சாய்க்கவில்லை.
ஒருவாரம் ஒருமாதம் ஆனது, பின்னர் இரண்டு மாதம், மூன்று மாதம் இப்படியே ஆறுமாதம் கடந்து பின்னர் கோவமாக அவரிடம் சென்று தனக்கு குங்பூ கலையை கற்றுத்தருவீர்களா இல்லை கற்றுத்தர மாடீர்களா என்றான். அந்த ஆசிரியர் அவனை அழைத்து சென்று ஒரு மண் வாளியை தண்ணீரால் நிரப்பி அவனது இரு உள்ளங்கையை கொண்டு மாறி மாறி அடிக்கச் சொன்னார். அவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதனை அடிக்க ஆரம்பித்தான். ஒரு வாரம் முழுவதும் அதை தொடர்ந்து செய்ததால் அடுத்து என்ன கற்றுத்தர போகிறீர்கள் என்று கேட்டான். அதற்க்கு அவர் மீண்டும் தண்ணீரை அடிப்பதையே தொடரச்சொன்னார்.
இப்படியே அவன் சென்று கேட்டபோதெல்லாம் அவனை மீண்டும் மீண்டும் அதையே தொடர்ந்து செய்யச்சொன்னார். காலம் வேகமாக கடந்து போனது. ஆறு மாதங்கள் ஆனது இப்போது அவன் கோவமாக அடுத்து வேறு எதாவது கற்றுத்தருவீர்களா என்று கேட்டான். இம்முறை அவன் கோவத்திற்கு செவி சாய்க்காமல் மீண்டும் மீண்டும் தண்ணீரை அடிக்கும் பயிற்சியையே தொடரச்சொன்னார். இப்படியே ஒரு வருடம் கழிந்தது அவன் வேறெதுவும் புதிதாக கற்றுக்கொள்ளவில்லை. அப்போது ஒன்றரை ஆண்டுகள் கழித்து அவன் வீட்டிற்க்கு சென்றான். அவன் வீட்டில் அவன் உறவினர்கள் எல்லோரும் அவனை குங்பூ கலையை செய்து காட்டுமாறு வேண்டினர். அவன் தான் எதுவும் கற்கவில்லை என்று சொன்னான்.
உறவினர் எல்லோரும் அவன் தங்களை ஏமாற்றுகிறான் என்று எண்ணி அவனை கேளி செய்தனர். அதனை சகிக்க முடியாமல் அவன் கோவத்தின் உச்சத்திற்கே போனான். அங்கு சென்று நான் கற்றுகொண்டது இதுதான் என்று எதிரே இருந்த மிக பெரிய மேசையை அடிதான். அப்பொழுது அந்த மேசை இரண்டாக பிளந்தது. உறவினர் எல்லோரும் அதனை பார்த்து வியந்தனர்.
அப்பொழுது தான் அவன் பயின்ற பயிற்சி அவனை எவ்வாறு செம்மை படுத்தி இருக்கிறது என்பதை உணர்ந்தான்.
குங்பூ என்பது ஒவ்வொரு பயிற்சியாக எடுத்துக்கொண்டு அதனை திரும்ப திரும்ப பயிற்சி செய்து அதில் செம்மை அடைவது என்பதாகும்.
புரூஸ்லீ தனது வாக்கியங்களில்
என்று குறிபிடுகிறார் .
அதன் அர்த்தம் தான் ஒரு மனிதன் பத்தாயிரம் வகையான உதைகள் கற்றுகொண்டவனை கண்டு பயபடுவதில்லை என்றும் ஆனால் ஒரு மனிதன் ஒரு உதையை பத்தாயிரம் முறை பயின்று இருந்தால் அவனை கண்டு பயப்படுவேன் என்று குறிப்பிடுகின்றார்.
(தொடரும்)