திங்கள், 5 நவம்பர், 2018

உள் காய்ச்சல்

















அவள் சிரம் தாள
பார்வை முகம் காண சென்றது!
அவள் தலை நிமிர
என் இதயமே நின்றது !

பார்வையால் கேட்டாள்
வீரனா நீ ?
ஆம் பெண்னே
உன் முகம் பார்க்கும்
முன்பு வரை!

அவள் கரம் பற்ற
என் சுவாசம் தள்ளி நின்றது!
சண்டை போட
தெம்பில்லை என்றது!

சூசகமாக சொல்கிறாயா
என்றேன்?
அட போடா நெருப்பாக
சுடுகிறது என்றது!

புதன், 31 அக்டோபர், 2018

போர் ஆமா Pour













கார்மேகம் சூளுதடி
நீலவானம் மாறுதடி
புகையான தண்ணீரும்
பன்னீராய் தெளிக்குதடி

மழைச்சாரல் வீசுதடி
மௌனமொழி பேசுதடி
உணர்வுகள் ஒன்றுபட
புன்னகையாய் பூக்குதடி

சூடான தண்ணீரும்
சுகமாய் மெல்லிசையும்
ஜன்னல் வழி பார்வையிலே
நீர்தெளித்து விளையாடும்

காட்சிகள் உருண்டோடும்
மண்வாசம் மனம்கவிழும்
எறும்புகளும் உணவோடு
மேல்நோக்கி கவிழ்ந்தோடும்

இமைமூடா கண்ணுறக்கம்
தன் நிலை மறந்து
தேங்கிநிற்கும்
நினைவுகளின் பதிவிறக்கம்
என் நிலை மறந்து
போர் தொடுக்கும்.


96













உன் நிழற்படம் தேடுகிறேன்
என் கனவிலும் தேடுகிறேன்

நீ வீசிய வார்த்தைகள்
என் கருவிழி கழுவி ஓடியதால்!

நாம் சந்தித்த நினைவுகள்
என் உயிரை உருவி தாவியதால்!


நம்மோடு நடந்த தென்றல்
உன் ஓர பார்வை கண்டு
என் காதோரம் சொன்னதுண்டு
உன் "அவள்" பார்க்கிறாள் என்று!

மனதோடு சின்ன பாரம்
நீங்காது இருந்த நேரம்
ஆறான கண்கள் அன்று
உன் நிழற்படம் தேடுதின்று.

உள் ஓரம் ஊறுகின்ற
ஓங்காரம் பாடுகின்ற
நெஞ்சோர நினைவுகளுக்கு
ஓயாமல் சொல்வதுண்டு
"நீ என் நினைவில் இல்லை" என்று.