சனி, 9 செப்டம்பர், 2017

தானறியா தவம்


பூ தோற்கும்
புன்னகையாள்!
தன்பூவிழி மூடி
உறங்குகிறாள்!
கண்ணுறங்கா
கரு வண்டாய்
அவள் கண் விழிக்க
காத்திருந்தேன்.

புவி மேற்கு
இடம் பார்த்து
உருண்டோட!
மேகங்கள் கிழக்காக
இடம் மாற!
இருள் அனைத்தும்
இருமாப்பில்
மேல் சாய!
மடி அறியா
குழந்தையாய்!
கண் அயர்ந்து
போனேன்.

கனவோடு
வந்த மர்ந்தாள்
கருத்தினில் மட்டும்!
காணும்
முனைப்போடு தேடுகிறேன்
பாதங்கள் நகரும் மட்டும்.

வார்த்தைகளும் புரண்டோட!
வந்த எண்ணம் தடுமாற!
தானறியா தவங் கலைதேன்.
எண்ணத்து ஏடுகளையும்
எழுதுகோலையும்
ஒருசேர நான் தொலைத்தேன்

வருந்தாத நொடி இல்லை
இனி வருந்தி பலனில்லை
விடியாத இரவொன்று
வருவதிலும் தவறில்லை

கன நேரக் கண்ணுறக்கம்
கண்டங்கள் தாவும் வரைக்கும்
கற்பனைச் சிறகு முளைக்கும்
என் கவியோடு செர்த்தினிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக