மக்களுக்கு அரசு
மக்களுக்காய் அரசு
மக்களால் அரசு
என்று வசனஙகள்
எழுதிய வார்ப்புகளும்
மக்களுக்காய் அரசு
மக்களால் அரசு
என்று வசனஙகள்
எழுதிய வார்ப்புகளும்
பேச்சோடு இருக்குது இங்கே
பேசிய வேடிக்கை மனிதர்
எங்கே?
என் மக்களுக்கு அரசு
என் மக்களுக்காய் அரசு
என் மக்களால் அரசு
என்று கூசாமல்
சுருட்டியத்தின் கோப்புகளும்
மூச்சடக்கி உறங்குது இங்கே
விசாரிக்கும் நடுவர் எங்கே?
துளையிட்டு திருடுமாம்
திருடர் கூட்டம்
வருடும் காற்றையும் திருடுவார்
இந்த கூட்டம்
தட்டி கேட்பவர் மாயமாய்
மாறும் மட்டும்
தட்டி கேட்டிட இருக்குது
ஆயிரம் சட்டம்
ஏன் என்று கேக்க நாதியில்லை
கேட்டுவிட்டு வாழ்ந்தவர் சுவடுமில்லை
ஜனம் தான் நாயகர்கள்
என்று உரைத்தவர்கெல்லாம்
ஜனமே நாயகர்களாய் இன்றும்
சவ ஊர்வலத்தில்.
என்று உரைத்தவர்கெல்லாம்
ஜனமே நாயகர்களாய் இன்றும்
சவ ஊர்வலத்தில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக