புதன், 17 ஜூன், 2020

மென்பொறியாளன்






நித்தம் ஒரு ஆடை பூண்டு
சத்தம் ஏதும் சிரிதும் இன்றி
கண்ணாடி கூண்டினுள்ளே
கவுரவ சிறைவாசம்!

போலியான முகத்தி னொடு
புன்சரிப்பை கடன் கொடுத்து
வேலையல்லா நரிகளோடு
அடிமைகளின் சகவாசம்!


பேச்சதனில் பொறி பறக்க
பேசவேண்டிய இடம் இருக்க
ஓரமாய் புலம்பவைத்து
ஒடவிடும் வனவாசம்!

(மேலதிகாரி) 
சிறுபகைவன் தனை நினைத்து
(கணினிதிரை) 
பெரும்பகைவன் தனை முறைத்து
காட்சிக்கு நடுவே
கண்ணாடி திரைவைத்தும்
கலையவில்லை போராட்டம்!

வீடு திரும்ப நினைத்து
உள வாளியை அனைத்து
தலை கவிழ்ந்தே
ஒரு கூட்டம்!

குட்ட குட்ட 
குனிந்ததாலோ!
இல்லை மாயவுலகில் 
புதைந்ததாலோ!

திங்கள், 5 நவம்பர், 2018

உள் காய்ச்சல்

















அவள் சிரம் தாள
பார்வை முகம் காண சென்றது!
அவள் தலை நிமிர
என் இதயமே நின்றது !

பார்வையால் கேட்டாள்
வீரனா நீ ?
ஆம் பெண்னே
உன் முகம் பார்க்கும்
முன்பு வரை!

அவள் கரம் பற்ற
என் சுவாசம் தள்ளி நின்றது!
சண்டை போட
தெம்பில்லை என்றது!

சூசகமாக சொல்கிறாயா
என்றேன்?
அட போடா நெருப்பாக
சுடுகிறது என்றது!

புதன், 31 அக்டோபர், 2018

போர் ஆமா Pour













கார்மேகம் சூளுதடி
நீலவானம் மாறுதடி
புகையான தண்ணீரும்
பன்னீராய் தெளிக்குதடி

மழைச்சாரல் வீசுதடி
மௌனமொழி பேசுதடி
உணர்வுகள் ஒன்றுபட
புன்னகையாய் பூக்குதடி

சூடான தண்ணீரும்
சுகமாய் மெல்லிசையும்
ஜன்னல் வழி பார்வையிலே
நீர்தெளித்து விளையாடும்

காட்சிகள் உருண்டோடும்
மண்வாசம் மனம்கவிழும்
எறும்புகளும் உணவோடு
மேல்நோக்கி கவிழ்ந்தோடும்

இமைமூடா கண்ணுறக்கம்
தன் நிலை மறந்து
தேங்கிநிற்கும்
நினைவுகளின் பதிவிறக்கம்
என் நிலை மறந்து
போர் தொடுக்கும்.


96













உன் நிழற்படம் தேடுகிறேன்
என் கனவிலும் தேடுகிறேன்

நீ வீசிய வார்த்தைகள்
என் கருவிழி கழுவி ஓடியதால்!

நாம் சந்தித்த நினைவுகள்
என் உயிரை உருவி தாவியதால்!


நம்மோடு நடந்த தென்றல்
உன் ஓர பார்வை கண்டு
என் காதோரம் சொன்னதுண்டு
உன் "அவள்" பார்க்கிறாள் என்று!

மனதோடு சின்ன பாரம்
நீங்காது இருந்த நேரம்
ஆறான கண்கள் அன்று
உன் நிழற்படம் தேடுதின்று.

உள் ஓரம் ஊறுகின்ற
ஓங்காரம் பாடுகின்ற
நெஞ்சோர நினைவுகளுக்கு
ஓயாமல் சொல்வதுண்டு
"நீ என் நினைவில் இல்லை" என்று.

சனி, 9 செப்டம்பர், 2017

தானறியா தவம்


பூ தோற்கும்
புன்னகையாள்!
தன்பூவிழி மூடி
உறங்குகிறாள்!
கண்ணுறங்கா
கரு வண்டாய்
அவள் கண் விழிக்க
காத்திருந்தேன்.

புவி மேற்கு
இடம் பார்த்து
உருண்டோட!
மேகங்கள் கிழக்காக
இடம் மாற!
இருள் அனைத்தும்
இருமாப்பில்
மேல் சாய!
மடி அறியா
குழந்தையாய்!
கண் அயர்ந்து
போனேன்.

கனவோடு
வந்த மர்ந்தாள்
கருத்தினில் மட்டும்!
காணும்
முனைப்போடு தேடுகிறேன்
பாதங்கள் நகரும் மட்டும்.

வார்த்தைகளும் புரண்டோட!
வந்த எண்ணம் தடுமாற!
தானறியா தவங் கலைதேன்.
எண்ணத்து ஏடுகளையும்
எழுதுகோலையும்
ஒருசேர நான் தொலைத்தேன்

வருந்தாத நொடி இல்லை
இனி வருந்தி பலனில்லை
விடியாத இரவொன்று
வருவதிலும் தவறில்லை

கன நேரக் கண்ணுறக்கம்
கண்டங்கள் தாவும் வரைக்கும்
கற்பனைச் சிறகு முளைக்கும்
என் கவியோடு செர்த்தினிக்கும்.

வெள்ளி, 2 ஜூன், 2017

மண்ணின் மைந்தர்கள்






வானம் முழுவதும்
இடி முழக்கம்!
தெறிக்கும் மின்னல்கள்
வீதி வரைக்கும்!
புன்னகை சிந்திய
வீர முழக்கம்!
சேர்த்து வைத்து
நிழல் படம் எடுக்கும்!

சுழலும் கம்புகளும் ,
காற்றை கீறும் அம்புகளும்,
உருவிய வாளும்,
ஊடுருவும் வேலும்,
பெண்டீர், பண்டிதரையும்
முதியோர், குழந்தைகளையும்
என்றும் தொட்டதில்லை.
பகைவரை என்றும் விட்டதில்லை.

வையம் போற்றும்
மண்ணின் வீரம்.
இன்று வைக்கபட்டதோ
சுவர்களின் ஓரம்..
போருக்கு நியதி
வகுத்தவர்கள் எல்லாம்
புறமுதுகில் குத்தும்
கயவர்கள் முன்னே
அஞ்சி நடுங்கிடும்
நிலைமையில் கண்டேன்

காதலும் இன்று
போதையாய் மாறும்
போதை மேலும்
தீராத மோகம்.
வஞ்சம் இன்று
வீரமாய் ஆகும்.
சூழ்சிகள் எல்லாம்
நீதியாய் போகும்.

விழுப்புண் இன்று
வெறும் விழும் புண்ணாய்
யாரிடம் சொல்ல
இது நம் மரபு அல்ல

போர்குணம் முழுவதும்
புழுதியில் போக
மிஞ்சிய வீரம்
நெருப்பினில் வேக
உறங்கியே வாழ்கிறோம்
உணர்சிகளை கொன்று
அடிமைகள் வாழும்
தேசத்தில் இன்று.

வியாழன், 1 டிசம்பர், 2016

வீருகொண்டெழு

வரி புலியே 
உன் வீரம் எங்கே
வீழ்ந் தாலும்
உன் சீற்றம் எங்கே

வேட்டையாடி பழக்கம் இல்லையே
வெறுங்கதைகள் நமக்கும் இல்லையே

முன்பொரு காலத்தில்
என தொடங்கும் வேகத்தில்
சிரிப்போசை கேட்க வில்லையா
கேட்டும் நீ நிறுத்த வில்லையா

குனிய குனிய குட்டு கின்றான்
எழுத்த்து நிற்கும் தெம்பு எங்கே
குனிந்து குனிந்து பழகியதால்
முதுகெலும்பு  நிமிர்வ  தெங்கே

வரலாறு நமக்கெதுக்கு
வீண் கதைகள் பேசுவதற்கு
முதுகெலும்பை நீ  நிமிர்த்து
உன் பழைய வரலாறை துடைத்து

வித்தாக புதைந்து விட்டாய்
ஒரு நாள் வளர்வோம் என நினைத்து
மழையில்லா காலமிது
உள் உஷ்ணத்தால் வளர்த்து
உன் மனச்சிறையை உடைத்து.